செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala

இரும்புச்சத்து நிறைந்த மக்காச்சோளத்தின் மருத்துவ பயன்களை பற்றி...

காய்கறி கடைகளில் இலையுடன் கூடி சோளம் காணப்படும். இது தானிய வகையைச் சார்ந்தது. சோளத்திற்கு சுவை அதிகம்.  நார்சத்து அதிகம். கொழுப்பு சத்து குறைவு. மேலும் பல சத்துக்கள் கொண்டது. நார்சத்து மிகுதியின் காரணமாக ஜீரணத்திற்கு  உகந்தது. கொழுப்பு சத்து ரத்தத்தில் சேரவிடாமல் தடுக்கின்றது. 

 
* மலச்சிக்கல் நீக்குகின்றது. சில குடல் நோய் பாதிப்புகள் தவிர்க்கப்படுகின்றன. பைல்ஸ் பாதிப்பு தடுக்கப்படுகின்றது. 
 
* வைட்டமின் பி 12 குறைபாடும்,பேஃலிக் ஆசிட் சத்து குறைபாடும் ரத்தசோகையை ஏற்படுத்தும். இரும்புசத்து குறைபாடும் ரத்த  சோகையினை ஏற்படுத்தும். சோளம் இவற்றினைத் தவிர்க்கும்.
 
* அதிக கார்போஹைடிரேட் கொண்டதினால் சோளம் நிறைந்த சக்தியினை அளிக்கின்றது. மூளை, நரம்பு மண்டலம் நன்கு  செயல்பட உதவுகின்றது. விளையாட்டு வீரர்களுக்கு ஏற்ற உணவாக சோள வகை உணவுகள் கருதப்படுகிறது.
 
* கெட்ட கொழுப்பினை நீக்குகின்றது. வைட்டமின் ‘சி’ சத்து மிகுந்தது. எடை குறைந்தவர்கள் இதனை உட்கொள்ள எடை  கூடுவர்.
 
* நார்சத்து மிகுதியின் காரணமாக சர்க்கரை நோய் தவிர்க்கப்படும். சர்க்கரை நோய் பிரிவு 2 நோயாளிகள் இதனை சிறிதளவு  எடுத்துக் கொள்ள சர்க்கரை ஏற்ற இறக்கங்கள் கட்டுப்படும். தசை, தசை நார்கள் வலுப்படும்.
 
* கண் பார்வை தேய்மானம் வெகுவாய் குறையும். கண் பார்வை அதிகரிக்கும். கல்லீரல் மார்பக புற்றுநோய்  தவிர்க்கப்படுகின்றது. கர்ப்ப காலத்தில் சிறந்த உணவு.
 
* ஒமேகா 3 ஆசிட் கொண்டதால் இருதய பாதுகாப்பாகின்றது. வாதம், மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகின்றது. லிட்டர்  கரோடின் உள்ளதால் சருமம் நன்றாக இருக்கும்.
 
* முடி வளர்ச்சி உறுதியாகி நன்றாக இருக்கும். முடி வறட்சி இராது. எலும்புகள் வலுவாகின்றன. சிவப்பு ரத்த அணுக்கள்  உருவாக உதவுகின்றன. சோளம் கொண்டு அதிக தென்னிந்திய உணவு வகைகளை தயாரிப்பது எளிது.