வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பேரீச்சம்பழம் இத்தனை அற்புத சத்துக்களை கொண்டதா...?

பேரீச்சையில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப்  பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய அருமையான பழம்.

தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம்  விருத்தியடையும்.
 
பேரீச்சம் பழத்தை பிற பழங்களுடன் கலந்து சாலட் ஆக செய்து சாப்பிட வாதம், பித்தம், முட்டி வீக்கம் குணமாகும். இந்த பழத்தில் இரும்புச் சத்து,  கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.
 
இனிப்பு உணவுகளைத் தவிர்த்துத் தவிக்கும் சர்க்கரை நோயாளிகள் கூட தாராளமாக பேரீச்சம் பழம் சாப்பிடலாம். பேரீச்சம் பழத்தில் உள்ள இனிப்பால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
 
ஒரு டம்ளர் பேரீச்சம் பழத்தை அரைத்துக் கலந்து சாப்பிட்டு வர எலும்பு வலுப்பெறுவதுடன், உடல் வலிமையும் கூடும். எங்கேனும் அடிபட்டதால் அதிக ரத்தப்  போக்கு ஏற்பட்டவர்கள் தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த இழப்பை விரைவில் ஈடுகட்டலாம்.
 
வெண்குஷ்டம் இருப்பவர்கள் பேரீச்சம்பழ சாறு குடிக்கலாம். இது இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.
 
தினசரி இரவில் 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டு சுடுதண்ணீர் அருந்தினால் மலச்சிக்கலைத் தரும் மந்தமான மலக்குடல் சுறுசுறுப்பாகி மலம் சுலபமாக வெளியேறும்.