1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சுத்தமான கலப்படமற்ற தேன் என்பதை எவ்வாறு தெரிந்துக்கொள்வது...?

தேன் நல்லதுதான் என்றாலும் அதை ஒரு சில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவது தவறு என்று ஆயுர்வேதத்தில் சொல்லப்படுகிறது.

தேனை சூடால பாலுடனோ அல்லது வெதுவெதுப்பான நீர், சூடான எலுமிச்சை நீர் மற்றும் சூடான தேனீருடன் கலந்து சாப்பிடக் கூடாது என்று ஆயுர்வேத வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். இது பல நோய்களுக்கு வழிவகுக்கும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.
 
அதேபோல் தேனை ஒருபோதும் சூடாக்குவது அல்லது சூடான பொருட்களுடன் கலந்து சாப்பிடுவது என்பதும் தவறானது என கூறுகின்றனர். இல்லையெனில் அது உங்களுக்கே விஷமாக மாறும் என்கின்றனர்.

தேனை மலைகளிலிருந்து நேரடியாக எடுத்து விற்பனை செய்பவர்களிடன் தேன் வாங்கி பயன்படுத்துவது நல்லது.
 
அதில் சுத்தமான தண்ணீரை ஒரு கிளாஸில் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 2 சொட்டு தேனை விடுங்கள். தேன் அப்படியே தண்ணீருக்குள் கெட்டிப்பதத்திலேயே கீழே சென்று விழுந்தால் அது சுத்தமான கலப்படமற்ற தேன்.
 
ஒருவேளை அந்த தேன் ஊற்றிய உடனேயே தண்ணீரோடு தண்ணீராகக் கலந்து நீரில் நிறம் மாறினால் அது கலப்படம் நிறைந்த தேன். எனவே அடுத்தமுறை இந்த சோதனையை செய்து பார்த்து தேன் வாங்குங்கள்.
 
சுத்தமான தேன் என்பது ஊட்டச்சத்து மிக்கதாகவும், கொழுப்பு நீக்கப்பட்டதாகவும் இருக்கும். குறிப்பாக ஆண்டி ஆக்ஸிடண்ட், ஆண்டிபாக்டீரியல் பண்புகள் நிறைவாக இருக்கும். ஆனால் கலப்படம் செய்யப்பட்ட தேன் வகைகள் நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தால் உடல் நலத்திற்குக் கேடு என்று கூறப்படுகிறது. அதில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கக் கூடும். அதேபோல் உடல் பருமன் பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.