புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் கிவி பழம் !!

கிவி பழத்தில் நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், போலிக் அமிலங்கள், சி மற்றும் ஈ விட்டமின்கள், கரோடனாய்ட், ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் மினெரல்ஸ் நிரம்பியுள்ளது.

தினமும் இரண்டு முதல் மூன்று கிவி பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் பல நன்மைகளை பெறலாம். கிவி பழத்தில் ஆஸ்துமாவை சரிசெய்யும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மேலும் கிவி பழத்தை வாரத்திற்கு 1-2 ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது.
 
கிவி பழத்திலுள்ள நார்ச்சத்துக்கள் ஜீரண சக்தியை மேம்படுத்துவதுடன் உடலிலிருந்து நச்சுப்பொருட்களை வெளியேற்றவும் செய்கிறது.
 
இதிலுள்ள நார்ச்சத்துக்களும் பொட்டாசியமும் இதய நோய்கள் வராமல் காக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று கிவி பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்த உறைவு 18 சதவிகிதம் குறைவதாக கூறப்படுகிறது.
 
கிவியில் இருக்கும் விட்டமின் ஈ மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் வயதாகும் தன்மை குறைந்து சுருக்கங்கள் இன்றி உடல் இளமையை தக்க வைக்கலாம்.