சனி, 28 செப்டம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 6 மே 2022 (17:51 IST)

கேரட்டில் உள்ள சத்துக்களை முழுமையாக பெற சில ஆரோக்கிய டிப்ஸ் !!

கேரட்டில் இருக்கும் வைட்டமின் A கண்களின் பார்வையைத் தெளிவாக்கி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இவற்றில் குறைவான கலோரிகள் இருப்பதால் டயட் இருப்பவர்கள் கேரட்டை தவறாமல் சாப்பிடலாம்.


கேரட்டில் உள்ள நார்ச்சத்து காரணமாக அவற்றை ஒரு கப் அளவு தினந்தோறும் என தொடர்ந்து 3 வாரம் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.

கேரட்டை வேகவைப்பதன் மூலம் அதன் கடினமான சுவர்களில் அடைபட்டிருக்கும் பீட்டா கரோட்டின் வெளிவருகிறது. எனவே, இவற்றை சமைக்கும் போது சிறிது வெண்ணெய் சேர்த்தால் அதன் மொத்த சத்தையும் உடல் நன்றாக எடுத்து கொள்ளும்.

கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ மாலைக்கண் நோயை குணமாக்குகிறது. பீட்டா கரோட்டின் சத்து நமது உடலுக்கு சென்றவுடன் வைட்டமின்-ஏ வாக மாறுகிறது. இது கண் பார்வையை தெளிவாக்குவதுடன் சரும பளபளப்புக்கும் உதவுகிறது.

கேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்றவை அதிக அளவில் உள்ளது. எனவே இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு சத்து குறையும்.

இந்த அற்புத காய்கறியை சமைத்தோ அல்லது மாத்திரை வடிவமாகவோ சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிட்டால் இவற்றில் உள்ள சத்துக்களை முழுமையாக பெறலாம். இதன் மூலம் இதய தொடர்பான நோய்களையும் தடுக்க முடியும்.