1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 6 மே 2022 (11:23 IST)

குங்குமப்பூ சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா...?

குங்குமப்பூவை சாப்பிட்டு வந்தால் இதில் இருக்கும் சத்துக்கள் கருவிழி தசைகளை வலுவடைய செய்து, விழித்திரை சேதமடையாமல் தடுக்கிறது. வயதானவர்களின் பார்க்கும் திறனை அதிகரிப்பதில் குங்குமப்பூ முக்கியப்பங்கு வகிக்கிறது.


குங்குமப்பூ பார்வைத்திறனை பாதுகாப்பதோடு, விழித்திரையை சீரமைக்கவும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன் இரத்ததை சுத்திகரிக்கவும் உதவுகிறது. குங்குமப்பூ சாப்பிட்டால் இரத்த சோகை ஏற்படுவது குறையும்.

குங்குமப்பூவுடன் சிறிதளவு சந்தனம் மற்றும் 2 ஸ்பூன் பால் இவை மூன்றையும் கலக்கி முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவந்தால் சருமம் பொலிவாக இருக்கும்.

குங்குமப்பூவில் ஆன்டிஆக்சிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வளமான அளவில் இருப்பதால், இவை செரிமானத்தை ஊக்குவிக்கிறது.

குங்குமப்பூ பாலுணர்வை தூண்டக்கூடியது. விறைப்புத்தன்மை தொடர்பான பிரச்சினை உள்ள ஆண்கள் குங்குமப்பூவை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இது ஆணின் இனப்பெருக்க மண்டலத்தை மேம்படுத்துகிறது.