1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 6 மே 2022 (12:52 IST)

பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்ட வாழைத்தண்டு !!

வாழைத்தண்டின் பயன்கள் சிறுநீரக கற்களுக்கு மட்டுமில்லாமல் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கும் உதவுகிறது. வாழைத்தண்டை  கூட்டு, பொரியல் செய்து உணவில் சேர்த்து சாப்பிடுவது பயன் தரும்.


சிறுநீரக கற்களை வெளியேற்ற வாழைத்தண்டு ஜூஸ் பயன்படுத்தப்படுகிறது. வாழைத்தண்டில் நார்சத்து அதிகம் உள்ளது, இவை செரிமானத்தை சீராக்குகிறது டையூரிட்டிக் பண்புகளை கொண்டுள்ள வாழைத்தண்டு ஜூஸ் உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றி உடல் ஆரோக்கியத்தை  மேம்படுத்தும்.

வாழைத்தண்டு உடல் எடையை குறைக்க உதவும். வாழைத்தண்டை உணவில் சேர்த்து சாப்பிடும் பொது அதில் உள்ள நார்சத்து காரணமாக வயிறு விரைவாக நிறைந்து விடும். மேலும் இது உடல் எடையை குறைக்க உதவும்.

வாழைத்தண்டில் வைட்டமின் பி6 மற்றும் பொட்டாசியம் உள்ளது . வைட்டமின் பி 6 ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் , அதே சமயம் அதில் உள்ள பொட்டாசியம் கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்தததை குறைத்து கட்டுக்குள் வைக்கும்.

வாழைத்தண்டு சாறு சிறுநீரக கற்களை கரைக்கும் , வாழைத்தண்டில் உள்ள பொட்டாசியம் சிறுநீரக கற்கள் உருவாகுவதை தடுக்கும். டையூரிட்டிக் பண்புகளை கொண்ட வாழைத்தண்டு ஜூஸ் சிறுநீர் உற்பத்தியை அதிகரித்து அதன் மூலம் சிறுநீரக கற்களை வெளியேற்றும்.

வாழைத்தண்டு சாறு தயாரிக்க ஒரு வாழைத்தண்டை நறுக்கி அதில் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும், அதில் சிறிது மோர் மற்றும் உப்பு சேர்த்து உடனே குடிக்கவும், வாழைத்தண்டு ஜூஸ் சுவையில் சிறிது துவர்ப்பாகவும், கசப்பாகவும்  இருக்கும்.

சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் காலையில் வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் சிறுநீர் வழியாக வெளியேறும்.