வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நெஞ்சு சளியை போக்க உதவும் சில அற்புத இயற்கை மருத்துவ குறிப்புக்கள் !!

சளிப்பிரச்சினைகளால் தொடர்ந்து இருமல் மற்றும் சுவாசக்கோளாறுகள் வந்து சிரமப்படுவார்கள், தொண்டை புண்ணுக்கு தேன் ஒரு நல்ல மருந்தாக கருதப்படுகிறது.


மூலிகை தேநீர் அல்லது வெதுவெதுப்பான நீர் மற்றும் எலுமிச்சையுடன் 2 டீஸ்பூன் தேனை கலந்து உட்கொள்வதன் மூலம் இருமலுக்கான சொந்த தீர்வை வீட்டிலேயே தயார் செய்யலாம். 
 
புதினாவில் உள்ள மெந்தால் சளியை நீக்க உதவுகிறது. புதினா தேநீர் குடிப்பதன் மூலம் அல்லது புதினா நீராவியை உட்கொள்வதன் மூலம் பயனடையலாம்.
 
இஞ்சி வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமா இருமலைக் குறைக்க உதவுகிறது. சளி அல்லது கபத்தை உருவாக்கும் இருமலில் இருந்து விடுபட நீராவியை எடுத்துக்கொள்வதன் மூலம் நிவாரணம் பெறலாம்.
 
சளி, இருமல் வந்துவிட்டால் தண்ணீரை சூடாக்கி குடிப்பதுடன் கொதிக்கும் நீரில் 2 மேசை கரண்டி சுக்கு தூளுடன் 1/4 மேசைக் கரண்டி எலுமிச்சை சாறு, 1 மேசை கரண்டி தேன் கலந்து பருகினால் நன்று.
 
நெஞ்சு சளியை உடனே தீர தினமும் 2 மேசை கரண்டி இஞ்சி சாற்றில் 2 மேசை கரண்டி தேன் கலந்து தினமும் 3 வேளை உண்ண வேண்டும்.
 
தொண்டை புண் மற்றும் ஈரமான இருமலுக்கு சிகிச்சையளிக்க உப்பு நீர் கொண்டு வாய் கொப்புளிக்கவும். இந்த எளிய தீர்வு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. உப்பு நீர் தொண்டையின் பின்புறத்தில் உள்ள கபம் மற்றும் சளியைக் குறைக்கிறது மற்றும் இருமலைப் போக்குகிறது.