வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தைராய்டு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன...?

தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியில் ஏற்படும் கோளாறு காரணமாக  தொண்டையில் உண்டாகும்  நோயாகும், இதனை ஆரம்பத்தில் கண்டறிவது கடினம். 
 

ஆனால் இதன் சிக்கல்கள் அதிகரிக்கும் போது  தொண்டையின் முன் பகுதியில்  ஒரு வட்டமான கட்டி போல காட்சி அளிக்கும். இதற்கு முக்கிய காரணம் அயோடின் குறைபாடாகும். எனவே, நாம் உட்கொள்ளும்   உணவில் அயோடின் உப்பை சரியான அளவில் சேர்த்து   உட்கொண்டால் தைராய்டு பிரச்சினைகள் ஏற்படாது. 
 
தைராய்டு சிக்கலுக்கு  மிகவும் பொதுவான காரணம் கிரெவ்ஸ்  நோய், இது தைராய்டு சுரப்பியில் உண்டாகும் கோளாறுகள்  காரணமாக  ஏற்படுகின்றது. இதன் காரணமாய் தைராய்டு சுரப்பி அதிக ஹார்மோன்களை சுரக்கிறது.
 
தைராய்டு சுரப்பியில் உள்ள நீர்கட்டிகள் அதன் செயல்பாட்டை பாதிக்கிறது. உடலில் அயோடின் குறைபாடு காரணமாக  தைராய்டு நோய் ஏற்படுகிறது.
 
பெண்களின் கர்ப்ப காலத்தில் உண்டாகும்  ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஹார்மோன்களில் உண்டாகும்  ஏற்றத்தாழ்வுகள் தைராய்டு தொடர்பான பிரச்சினைகளுக்கு ஒரு காரணமாக  அமைகிறது.
 
பிட்யூட்டரி சுரப்பியில் புற்றுநோய் செல்கள் உருவாகும் போது தைராய்டு சுரப்பி செயலிழக்கக்கூடும். மன அழுத்தம் மற்றும் பதட்டம் உண்டாவது  தைராய்டு நோயின்  அபாயத்தை அதிகரிக்கிறது. மன நிம்மதியுடன் இருப்பதே ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
 
உயர் இரத்த அழுத்த நோயாளிகளிடத்தில் தைராய்டு நோய் அபாயம் அதிகரிக்கிறது. பெண்களுக்கு  பெரும்பாலும் பிரசவத்திற்குப் பிறகு தைராக்ஸின் ஹார்மோனில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகும்.