செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறதா கிவி பழம் ?

கிவி பழத்தில் உள்ள இயற்கை நொதிகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் தூக்கத்தை மேம்படுத்துகின்றன. கிவியில் செரோடோனின் இருப்பதினால், இது தூக்கமின்மையை  குணப்படுத்துகிறது. 

வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த, கிவி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
 
கிவி பழங்கள் புரதத்தின் உறைவிடமாகும், இவை உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. கிவி பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் இரத்த அழுத்தத்தை பராமரிக்கின்றன.  
 
கிவி பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன, இது உடலில் உண்டாகும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. 
 
கிவி அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த பழமாகும், இது கண் தொடர்பான பிரச்சினைகளை சரிசெய்கிறது. மற்றும் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
 
சருமத்தின் தரத்தை மேம்படுத்தவும், முக பருக்களைக் குறைக்கவும் பெண்கள் தினமும் கிவி பழத்தை உட்கொள்ளலாம். உடலில் அதிக கொழுப்பு உள்ள பெண்கள், தம் உடலில் உள்ள கொழுப்பின் அளவை பராமரிக்க கிவி பழத்தை உட்கொள்ளலாம்.