புகைப்பிடிப்பதை நிறுத்துவதால் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா...?

புகைப்பிடிக்கும் பழக்கத்தினால் உடலின் ஆரோக்கியத்திற்கு கேடுதான் அதிகமாகும். புகைப்பதை நிறுத்தும்போது அவருடைய உடல் நிலையில் உடனடியாக நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது. இந்த பழக்கத்தை கைவிடுவதனால் உடலில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்வது  அவசியமானது..
புகைப்பிடிப்பதை தவிர்த்து 20 நிமிடங்களின் பின்பு, இதயத் துடிப்பும், இரத்த அழுத்தமும் சீராக இருக்கும். 8 மணி நேரங்களின் பின்பு,  இரத்தத்தில் கார்பன் மோனாக்சைடு அளவு குறைவடைந்து, ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும்.
 
24 மணி நேரங்களின் பின்பு, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புக்கள் குறைவடையும். 48 மணி நேரங்களின் பின்பு, சுவை, வாசனை போன்ற  புலனுணர்வுகள் மேம்படுவதுடன், நரம்பு முடிச்சுக்கள் மீண்டும் வளர ஆரம்பிக்கும்.
ஒன்று முதல் ஒன்பது மாதங்களிற்குள் உடலில் சக்தி மீட்கப்படுவதுடன், சுவாசப் பிரச்சனை, இருமல், சைனஸ் போன்றவை குணமடையும். நுரையீரல் சுத்தமடைவதுடன், தொற்றுக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவடையும்.
 
ஒரு வருடத்தின் பின்பு, இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் இரண்டு மடங்கு குறைவடையும். 5 வருடங்களுக்கு  பிறகு, தொண்டை, வாய், குடல் புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் பாதி குறைவடைவதுடன், நுரையீரல் பாதிப்பினால் இறப்பதை இரண்டு மடங்கு தடுக்க  முடியும்.
 
10 வருடங்களின் பின்பு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்கள் குறைவடைவதுடன், கணையகலங்கள் மாறுவதனால் பல உறுப்புகளிலும் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.
 
காலையில் எழுந்ததும் புகைபிடிப்பவர்களது உடலில் நிகோடின் மற்றும் இதர புகையிலை நச்சுகள், மற்ற நேரங்களில் புகை பிடிப்பவர்களைக் காட்டிலும் அதிகமாக காணப்படுகின்றன. அத்துடன் புகை பிடிக்கும் மற்றவர்களை விட இவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு மிக அதிகமாக  அடிமையாக உள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
நுரையீரல் புற்றுநோய் தொடர்பாக அந்நோய் பாதித்த 4,775 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அவர்கள் அனைவருமே காலையில் எழுந்ததும் வழக்கமாக சிகரெட் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள் என ஆய்வு தெரிவிக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :