1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மஞ்சள் காமாலையை குணமாக்கும் சித்த மருத்துவ குறிப்புகள்...!!

மஞ்சள் காமாலை நோய் பித்தம் அதிகரிப்பதாலும், கல்லீரல் செல்கள் பித்தநீரை வெளிப்படுத்தாதபோதும், பித்தப்பையில் இருந்து பித்தநீர் குடலுக்கு வருகின்ற பாதையில் ஏற்படும் அடைப்பினாலும் காமாலை ஏற்படுகிறது.
சோர்வு பலவீனம் உடல் அரிப்பு வாந்தி குமட்டல் பசியின்மை, மலக்கட்டு கழிச்சல், சுரம், மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போன்ற அறிகுறிகள்  காணப்படும்.
 
கீழாநெல்லி இலை வேர் இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம் அரை ஸ்பூன் கடுக்காய்ப் பொடியை நீரில் கலந்து குடிக்கலாம். ஒரு ஸ்பூன் வெட்டி வேர்ப்பொடியில் அரை டம்ளர் நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வடித்துப் பருகலாம்.
 
சிற்றாமணக்கு இலையையும், கீழாநெல்லியையும் சமஅளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள் காலையில், சிறு எலுமிச்சை அளவு உண்டு, பிறகு சிவதைப் பொடி அரை ஸ்பூன் உண்ணலாம்.
 
சீரகத்தைக் கரிசாலைச் சாற்றில் ஊறவிட்டு பொடித்தப் பொடி நான்கு கிராம், சர்க்கரை இரண்டு கிராம், சுக்குப் பொடி இரண்டு கிராம் கலந்து  அதில் ஒரு ஸ்பூன் உண்ணலாம்.
 
மஞ்சகாமாலை உணவு முறை:
 
மஞ்சள் காமாலைக்கு பத்திய உணவு மிக அவசியம். எல்லா வித கொழுப்புள்ள உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். மசாலா, கொழுப்பு,  எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிடக் கூடாது. எளிதில் ஜீரணமாகும்,. புதிதாக சமைத்த, சூடான உணவுகளை உட்கொள்ள வேண்டும். சட்னி,  ஊறுகாய், எண்ணெய்யில் பொறித்த உணவுகள், கூடாது.
 
நிறைய பழச்சாறு, கரும்புச் சாறு கொடுக்கலாம். மோர் மிக நல்லது. எளிதாக ஜீரணமாகாத பருப்பு போன்றவற்றை தவிர்க்கவும். உலர்ந்த திராட்சை, பேரிச்சைப்பழம், பாதாம் இவைகளை சிறிய அளவில் கொடுக்கலாம்.