புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

கருப்பு மிளகில் உள்ள அற்புத மருத்துவகுணங்கள் என்ன....?

கருப்பு மிளகில் பைபர்னைன் என்னும் பொருள் உள்ளது. பைபர்னைன் புற்றுநோய் ஏற்படுத்துவதற்கான ஆபத்தை இருமடங்கு குறைக்கிறது  என்று ஆய்வுகள் கூறுகிறது.
மிளகில் வைட்டமின் சி, பி, வைட்டமின் ஏ, கரோட்டின் போன்ற சத்துக்களும் உள்ளது. இவை அனைத்தும் உங்கள் உடலில் இருக்கும்  புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுக்களை வெளியேற்ற உதவும்.
 
தினமும் உணவில் மிளகை சேர்த்து கொள்வதால் மூளையை நன்கு செயல்பட வைப்பதுடன், வயதாவதால் ஏற்படும் மறதி, அல்சைமர், மூளைக்கோளாறுகள் போன்றவற்றை சரிசெய்ய உதகிறது.
 
தினமும் உணவில் ஒரு ஸ்பூன் மிளகு சேர்த்துக் கொள்வதால், பல பலன்களை கொடுக்கும். அதிக கலோரிகள் எரிக்கப்படுவதால் உடல் எடை  வேகமாக குறையும்.
 
நீங்கள் சருமத்திற்கு உபயோகப்படுத்தும் பொருட்களில் சிறிதளவு மிளகை கலப்பதாலும், தினமும் சாப்பிட்டு வருவதாலும் உங்களுக்கு வயதாவதையும், முகத்தில் சுருக்கம் ஏற்படுவதையும் குறைக்கும்.
 
மிளகை நேரடியாக ஈறுகளில் உபயோகிக்காமல், கிராம்பு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து வலி உள்ள இடத்தில்  வைத்தால் விரைவில் பல்வலி குணமாகும்.