1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Hair care in a simple manner using existing objects in the house...!!

வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி எளிய முறையில் தலைமுடி பராமரிப்பு...!!

வீட்டில் உள்ள பொருட்கள்
நாம் வீட்டில் இருக்கும் பொருளை கொண்டு தலைமுடியை மிக எளிதாக பராமரிக்கலாம். தலை முடியின் வேர்க்கால்கள் வலுவிழப்பது போதிய ஊட்டச்சத்து இல்லாதது தான். இதற்கு பாலுடன் சிறிதளவு தேன், முட்டை சேர்த்து நன்றாக தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி நன்றாக தேய்த்து 15 நிமிடம் ஊறவைத்து  குளித்து வர தலைமுடி நன்றாக வலுப்பெறும்.
பாலில் க்ளுடைமன் என்ற அனிமோ அமிலம் இருப்பதால் இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. புதிய முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.
 
பாலில் கேசின் மற்றும் வே என இரண்டு விதமான புரோட்டீன் இருக்கிறது. புரோட்டீன் குறைபாட்டால் தலைமுடி வலுவிழக்கும். எனவே புரோட்டீன் அதிகமுள்ள  உணவுகளை எடுத்துகொள்வது சிறந்தது.
 
தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் அடர்த்தியாகவும் வளரும். தலையும்  குளிர்ச்சியாக இருக்கும்.
 
வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.
 
கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான  நிறத்துடன் வளரும்.
 
ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணெய்யில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.
 
கறிவேப்பிலை அல்லது வெந்தயத்தைப் அரைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்குப் பிறகு தினமும் தேய்த்து வந்தால் முடி  உதிர்வது நிற்கும். தேங்காய் எண்ணெயில் காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து காய்ச்சி தலையில் தேய்த்தாலும் முடி நன்கு வளரும்.
 
கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் பொருட்களில் முக்கியமானது விளக்கெண்ணெய். ஆகவே வாரம் 1-2 முறை விளக்கெண்ணெய்யை தடவி மசாஜ் செய்து  குளித்தால், கூந்தல் உதிர்தல் குறைந்து, அதன் வளர்ச்சி அதிகரிக்கும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
சர்வதேச மகளிர் தினம் !ஒரு போராட்டத்திற்கான, புரட்சிக்கான விதை விதைக்கப்பட்ட நாள் !!