வயிறு தொடர்பான பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் இஞ்சி !!
இஞ்சிச் சாற்றில் சம அளவு எலுமிச்சைச் சாறு கலந்து, சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் அஜீரணக் கோளாறுகள் குணமாகும். இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு இரண்டையும் தலா பத்து மில்லி எடுத்து ஒன்றாகக் கலந்து குடித்தால், வாந்தி உடனே நிற்கும்.
இஞ்சி செரிமான அமைப்பையும் பலப்படுத்துகிறது. மேலும், வயிற்று வலி, வயிற்று பிடிப்பு போன பிரச்சனைகள் உள்ளவர்கள், பச்சையாக இஞ்சியை சாப்பிட வேண்டும். வயிறு தொடர்பான பல பிரச்சனைகளுக்கு பச்சை இஞ்சி பெரிய நிவாரணமாக அமையும்.
கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதில் பச்சை இஞ்சியும் முக்கியப் பங்காற்றுகிறது. இஞ்சியை உட்கொள்வதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கலாம்.
சுறுசுறுப்பை மேம்படுத்தவும், வியர்வையை வெளியேற்றவும் சரியான நேரத்தில் இஞ்சி உங்களுக்கு கைகொடுக்கும். மாதவிடாய் தசை பிடிப்புகளுக்கு தோல் நீக்கிய இஞ்சியை பயன்படுத்தி சூடான இஞ்சி தேநீர் குடிக்கலாம்.
வயிறு கோளாறு, வயிறு உப்புசம், வாய்வு தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு இஞ்சி அருமையான நிவாரணம் அளிக்கும். உடலும், மனதும் சோர்வாக இருக்கும் போது இஞ்சியை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் புத்துணர்ச்சி தானாக வரும்.
இஞ்சிச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்துக் காயவைத்து எடுத்து தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குணமாகும்.