1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பொடுகு தொல்லையை போக்கும் இஞ்சி சாறு...!!

இஞ்சி பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் அரிப்பு ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது. மற்றும் இஞ்சி சரும பராமரிப்பிற்கும் பயன்படுத்த முடியும்.

இஞ்சியில் ஆன்டி பாக்டீரியல் என்னும் பொருள் உள்ளதால் செரிமான கோளாறு, சளி, இருமல் போன்றவற்றிற்கும் பயன்படுத்த படுகிறது. அத்தோடு இஞ்சி வலி  நிவாரணியாகவும், தூக்கத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
 
இஞ்சி, உடலில் ஏற்படும் ஒவ்வாமையையும் தடுக்க உதவுகிறது. பொடுகு மற்றும் தலை அரிப்பை நீக்க இஞ்சி எவ்வாறு பயன்படுகிறது என்பதற்கு மருத்துவர்  ஒருவர் அளித்த விளக்கம் வருமாறு இஞ்சியை எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிய பின்னர் அதனை தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் அடுப்பில் வேகவைக்க  வேண்டும்.
 
சிறிது நேரத்தில் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் நிறம் மாறிய பிறகு அடுப்பை அணைத்து விட்டு அந்த நீரை வடிக்கட்டி தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த இஞ்சி சாற்றின் சூடு தணிந்த பின் சின்ன ஸ்பிரே பாட்டிலில் வைத்து நேரடியாக தலை முடியின் வேர்க்கால்களில் படும் விதமாக பயன்படுத்தலாம். 

இது அரை மணி முதல் 1 மணி நேரம் வரை தலையில் இருக்கும் விதமாக வைத்துவிட்டு ஷாம்பு தேய்த்து தலை முடியை கழுவ வேண்டும் இவ்வாறு வாரம் ஒரு  முறை செய்வதன் மூலம் தலை அரிப்பு குறைந்து விடும். 
 
தினமும் தலைக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதும் மிகவும் அவசியம். இப்படி செய்தால் பொடுகு தொல்லையில் இருந்து இயற்கையாகவே விடுதலை பெற  முடியும்.
 
பொடுகுத் தொல்லை: இஞ்சி சாற்றில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, ஸ்கால்ப்பில் சுரக்கும் எண்ணெயின் அளவைக்  குறைக்கும் மற்றும் ஸ்கால்ப்பில் தொற்றுகளால் பொடுகு வருவதைப் போக்கும். அதற்கு இஞ்சி சாற்றால் ஸ்கால்ப்பை மசாஜ் செய்து அலச வேண்டும்.

ஸ்கால்ப் காயங்கள்: தலையில் பொடுகு இருக்கும் போது ஏற்படும் அரிப்பால், சிலருக்கு தலையில் காயங்களே ஏற்பட்டுவிடும்.  இன்னும் சிலருக்கு ஸ்கால்ப்பில்  பருக்கள் வரும். இப்பிரச்சனைகளைப் போக்க இஞ்சி சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து அலசுங்கள்.
 
இஞ்சி சாற்றில், சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, தலையில் தடவி குறைந்தது 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி செய்வதால், தலைமுடியின் பொலிவு அதிகரிக்கும்.