தொடர்புடைய செய்திகள்
- வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி முகப்பருக்களை விரட்ட...!!
- குழந்தைகளுக்கு தேவையான சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ள உணவுகள் எவை தெரியுமா...?
- கல்லீரலின் செயல்பாடு பாதிப்பு ஏற்படாமலிருக்க என்ன செய்யவேண்டும்...?
- அஜீரண கோளாறுகளை போக்கும் அற்புத மருத்துவகுணம் கொண்ட சீரகம்...!!
- இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள எந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்...?
பல நோய்களுக்கும் நிவாரணம் தரும் வெந்தயம்...!!
வெந்தயம் உடல் சூட்டை அனைத்து உடலுக்கு குளிர்ச்சியை ஏற்ப்படுத்தும் சக்தி கொண்டது. புரதச்சத்து, மாவுச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து போன்ற அதிகமான சத்துக்களை கொண்டது வெந்தயம்.
இரவில் பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் சிறிதளவு வெந்தயத்தை போட்டு மூடிவிட்டு, காளையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிட்டு அதன் நீரையும் குடித்து வந்தால் மலசிக்கல், உடல் சூடு மற்றும் உடல் சூடால் ஏற்படும் நோய்கள் என பல நோய்களுக்கும் நிவாரணியாகும்.
விரைவில் விந்து வெளியேறும் பிரச்சினை இருக்கக்கூடிய ஆண்கள் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் பிறப்புறுப்பில் இரத்தம் ஓட்டம் அதிகரிப்பதால் பிரச்சினைகள் நீங்கும்.
அஜீரணம், வயிற்றுக்கோளாறுகள் மேலும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த, ஒரு தேக்கரண்டி அளவு வெந்தயத்தையும் பெருங்காயத்தையும் வறுத்து, ஆறவைத்து, மிக்ஸியில் பொடி செய்து அதனை ஒரு பாட்டிலில் போட்டு தினமும் தண்ணீர் அல்லது மோருடன் பயன்படுத்தலாம்.
வாய் துர்நாற்றம், வயிற்றுப்புண் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு வெந்தயத்தை மோரில் ஊறவைத்து தினமும் காலையில் சாப்பிட்டு வாருங்கள். கல்லீரலில் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி உடல் முழுவதும் இரத்தம் சீராக ஓட வெந்தயம் உதவி செய்யும்.
சிறுநீரக கற்களால் அவதிப்படுபவர்கள் வெந்தயத்தை உண்டு வந்தால் சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்கள் முழுமையாக வெளியேறும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும் அதில் நார்ச்சத்து இருப்பதால் வயிற்றை நிரப்பி நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும்.
அல்சர் போன்றவற்றிக்கு வெந்தயம் சிறந்த நிவாரணி. அதிலும் இரவில் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து காலையில் அந்த நீரை அல்லது வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீரை குடித்து வந்தாலோ அல்சர் போன்ற நோய்களுக்கு சிறந்தது. இதில் கரையும் நார்ச்சத்து இருக்கிறதால் வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றுடன் சாப்பிட்டு வந்தால் மலசிக்கல் தீரும்.
அமினோ ஆசிட் இன்சுலின் உற்பத்தியை தூண்டுவதால் தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.
வெந்தயம் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதாலும் அதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதாலும் இதய நோய் அல்லது இதய பிரச்சனைகள் வர வாய்ப்பில்லை.
அடுத்த கட்டுரையில்
