புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. குழந்தை வளர்ப்பு
Written By Sasikala

குழந்தைகளுக்கு தேவையான சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ள உணவுகள் எவை தெரியுமா...?

குழந்தைகளின் உணவு அதன் வளர்ச்சியில் முக்கியமாக பங்காற்றுகிறது. அந்த உணவின் ஒரு முக்கிய பகுதி சுண்ணாம்புச் சத்தாகும்.


சுண்ணாம்புச் சத்து எலும்புகள் உருவாகுதல் மற்றும் அதைப் பராமரிப்பதில் முக்கியமாக வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு அவை முக்கியமாக பங்காற்றுகிறது.
 
சுண்ணாம்புச்சத்து குறைவாக எடுத்துக்கொள்வது உங்களது குழந்தைகளுக்கு தேவையான எலும்பு அடர்த்தி பெறுவதை பாதித்து, அவர்களது எலும்புகளை  பலகீனமாக்கி அவர்களது வாழ்வில் பிற்காலத்தில் எலும்புப் புரை நோய் போன்றவற்றை ஏற்படுத்தும். ஆகையால், உங்களது குழந்தையின் உணவில் சுண்ணாம்புச்  சத்து நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.
 
பால் பொருட்கள், முக்கியமாக பால், புரதங்கள், வைட்டமின் ஏ மற்றும் டி ஆகியவற்றையும் கொண்டிருப்பதோடு சுண்ணாம்புச் சத்தும் அதிகம் நிறைந்த உணவுப்  பொருளாக திகழ்கிறது. 2 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு உணவில் அதிக சுண்ணாம்புச் சத்துள்ளவற்றில் பால் முதல் நிலையில் உள்ளது.
 
சிறுதானியங்களில் உள்ள ஊட்டச்சத்துக்களின் காரணமாக தானியங்களைக் காட்டிலும் சிறுதானியங்கள் மேம்பட்டவையாக கருதப்படுகின்றன. கம்பு, வரகு, தினை, பனி வரகு, குதிரைவாளி போன்ற பல்வேறு வகையான சிறு தானியங்கள் உள்ளன. சிறுதானியங்களில் அதிகமான சுண்ணாம்புச் சத்து உள்ளது.
 
குழந்தைகளின் உணவில் சேர்க்கப்பட வேண்டிய கொட்டைகளில் பாதாம், முந்திரி மற்றும் அக்ரூட் பருப்புகள் ஆகியவை அடங்கும்.
 
கொண்டைக்கடலையில் சுண்ணாம்புச்சத்து, புரதங்கள், மாவுச்சத்து, மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்ததுள்ளது. கொண்டைக் கடலையில் காணப்படும் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பேட், மற்றும் துத்தநாகம் போன்றவை எலும்பு கட்டமைப்பையும் பலத்தையும் பராமரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
 
பல்வேறு வகையான இறைச்சியில் பல்வேறு அளவுகளில் சுண்ணாம்புச் சத்து உள்ளது. மாட்டிறைச்சி, கோழி இறைச்சி, வாட்டப்பட்ட சாலமோன் மீன், இறாள், குளத்துமீன், கடல்மீன் வகைகள் மற்றும் பல்வேறு வகையான இறைச்சியில் சுண்ணாம்புச் சத்து நிறைந்துள்ளது.