1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. For which ailments is Thippili taken as medicine...?

எந்த நோய்களுக்கு திப்பிலியை மருந்தாக எடுத்துக்கொள்வது...?

நோய்கள்
திப்பிலி, சுக்கு, மிளகு போன்றவற்றை சேர்த்து கஷாயம் வைத்து சாப்பிடுவதால் எப்படிப்பட்ட ஜுரம், காய்ச்சல் போன்றவையும் நீங்கும்.


திப்பிலிப்பொடி, கடுக்காய்ப்பொடி சம அளவு எடுத்து தேன்விட்டு குழைத்து1/2 தேக்கரண்டி அளவு காலை, மாலை என இருவேளை உண்டுவந்தால் இளைப்பு நோய்நீங்கும்.

மூலம் ஏற்பட்டவர்கள் அது குணமாக திப்பிலி பயன்படுத்தி நிவாரணம் பெறலாம். திப்பிலியை நன்கு பொடி செய்து, அதனுடன் குப்பைமேனி செடியை நிழலில் உலர்த்தி பொடி செய்து திப்பிலி பொடியுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலம் சீக்கிரம் குணமாகும்.

திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் எடுத்து தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், தொண்டைக் கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு குணமாகும். இரைப்பை, ஈரல் வலுப்பெறும்.

திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு சம அளவாக எடுத்து வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் குணமாகும்.

திப்பிலியை இடித்துப் பொடியாக்கி 1 தேக்கரண்டியளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், கபம், வாய்வு நீங்கும். செரிமானம் அதிகரிக்கும்.

திப்பிலிப் பொடி, கடுக்காய் பொடி சம அளவாக எடுத்துத் தேன் விட்டுப் பிசைந்து இலந்தைப் பழ அளவு இருவேளை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டு வர இளைப்பு நோய் குணமாகும்.
அடுத்த கட்டுரையில்
முருங்கை பூ எந்த முறையில் சாப்பிடுவதால் பயன்கள் கிடைக்கும்...?