1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 13 ஜூன் 2022 (15:48 IST)

முருங்கை பூ எந்த முறையில் சாப்பிடுவதால் பயன்கள் கிடைக்கும்...?

Drumstick Flower
முருங்கை பூவை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி பொடி செய்து காலையில் கஷாயம் போட்டு அதனுடன் பனைவெல்லம் கலந்து குடித்து வந்தால் உடல் வலுவடையும். நரம்புகள் புத்துணர்ச்சி பெரும்.


ஒரு பிடி அளவு முருங்கைப் பூவை சுத்தமாக கழுவி பசும் பாலில் போட்டுக் காய்ச்சி கற்கண்டு தூள் போட்டு மாலையில் குடித்து வந்தால் உடல் வலுப்பெறும் தாது விருத்தியாகும். முருங்கைப் பூவுடன் முருங்கைப் பிஞ்சை சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் வெப்பம் தவிர்த்து ஆண்மை பெருகும்.

கர்ப்பப் பை பிரச்சனை, கருமுட்டைக் குறைபாடு, குழந்தையின்மைப் பிரச்சனைகளுக்கு முருங்கை பூவை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலனளிக்கும்.

முருங்கைப் பூவை அரைத்து வீக்கங்கள் மீது பற்றுப்போட்டால் வீக்கத்தை கட்டுப்படுத்தும். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் முருங்கைப் பூவை மென்று சாப்பிடுவது நல்லது.

முருங்கைப் பூவை இரவு நீரில் ஊறவைத்து மறுநாள் காலை பூவின் சாறை 2 துளிகள் கண்களில் விட கண் வலிகள் நீங்கும். விரை வீக்கம் சுருங்க முருங்கைப் பூவை அவித்து விரை மீது மூன்று நாட்கள் கட்டி வந்தால் நீர் வற்றி வீக்கம் சுருங்கி விடும்.