வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

குழந்தைகளுக்கு எத்தனை மாதம் வரைக்கும் தாய்பால் அவசியம் தெரியுமா...!

குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதைவரை அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அவசியம். குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்க ஆரம்பித்த உடன்  தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள். 
குழந்தைகளுக்கு குறைந்தது 6 மாதம் காலம்வரை தாய்ப்பால் கொடுப்பதால் எண்ணற்ற நன்மைகள் குழந்தைக்கும், தாய்க்கும் கிடைக்கும். ஏனெனில்  குழந்தையின் முதல் உணவே தாய்ப்பால் தான். 
 
அத்தகைய தாய்ப்பால் தான் குழந்தை வளர வளர நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ மூலதாரமாக உள்ளது. எனவே தாய்மார்கள் தவறாமல்  குறைந்தது 6 மாதமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 
 
குழந்தைகளுக்கு குறைந்தது ஆறு மாதங்கள் தாய்ப்பால் கொடுத்தால், அவர்களுக்கு சுவாசக்குழாயில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். குழந்தையின் சுவாசக்குழாயானது மிகவும் மென்மையாக இருப்பதால், அவர்களுக்கு ஆறு மாதத்திற்கு முன் மற்ற உணவுப் பொருட்களை கொடுப்பதால்,  பிரச்சனைகள் ஏற்படக்கூடும். 
 
ஊட்டச்சத்துக்கள் நிரைந்த தாய்ப்பால் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆறு மாதத்திற்குட்ட குழந்தைகளை நோய்களானது எளிதில் தொற்றிக் கொள்ளும். குறிப்பாக சளி பிடிப்பது, காது மற்றும் தொண்டையில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.