1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. For those who want to reduce body weight Help cabbage

உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு உதவிடும் முட்டை கோஸ்

முட்டை கோஸ்
ஆய்வில் 70 வயதை நிரம்பிய 958 பெண்களிடம் ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளார். முட்டை கோஸ் மற்றும் காலிபிளவர் சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவது குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் 3 வேளை உணவுடன் காய்கறிகளை சேர்த்து சாப்பிடுவதால் இரத்த நாளங்கள் வழுவடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சத்தான காய்கறிகளை உணவுடன் சேர்த்து சாப்பிடுவதால், மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை எனவும் இவ் ஆய்வின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முட்டைகோஸை சமைத்து சாப்பிடுவதைவிட பச்சையாக சாப்பிடுவதே மிகவும் சிறப்பானது இதை எந்த அளவுக்கு அடுப்பில் வைக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு இதன் சத்துக்களை இழந்துவிடும்.
முட்டைகோஸில் வைட்டமின் சி மற்றும் பி உள்ளன. முட்டை கோஸில் உள்ள சல்பர், மற்றும் அயோடின் ஆகியவை வயிறு, குடல் மற்றும் குடற் சவ்வு போன்ற உறுப்புகளை சுத்தப்படுதுகின்றன.
 
முட்டைகோஸில் டார்டரானிக் என்ற ஒரு வகை அமிலம் உள்ளது அது தேவைக்கதிகமாக உள்ள மாவுப்பொருள்களை கொழுப்பாக மாறாமல் இருக்க செய்கிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு பயனுள்ள உணவாக இருக்கும்.
 
வயிற்று புண் உள்ளவர்கள் இந்த முட்டை கோஸ் சாற்றை 3 அவுன்ஸ் வீதம் நான்கு முறை குடித்துவந்தால் வயிற்று புண் குணமாகும்.
அடுத்த கட்டுரையில்
சர்க்கரையின் அளவை சீராக்க உதவும் கிராம்பு...!