வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (18:16 IST)

குழந்தைகள் தினத்தை மாற்ற பாஜக முயற்சி! அதிர்ச்சியில் காங்கிரஸ்?

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் தற்போது  குழந்தைகள் தினத்தை மாற்ற முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த தினம் என்றாலே அனைவருக்கும் குழந்தைகள் தினம் என்பதுதான் ஞாபகம் வரும். ஆனால் அந்த தினத்தை டிசம்பர் 26ஆம் தேதிக்கு மாற்ற வேண்டும் என்று 59 எம்பிக்கள் கையெழுத்திட்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் பாஜக எம்பிக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 26 என்பது முகலாயர்களுக்கு எதிராக போராடிய சோட்டா சகித் சதேஷ் பிறந்தநாள் என்றும் இந்த தினத்தில்  குழந்தைகள் தினமாக கொண்டாடடினால் அவருடைய தைரியம், போராடும் நம்பிக்கை ஆகியவை குழதைகளுக்கு ஏற்படும் என்றும் இந்த எம்பிக்கள் கூறியுள்ளனர். மேலும் நேரு பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதியை அங்கிள் தினம் என்று கொண்டாடலாம் என்றும் அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். பாஜகவினர்களின் இந்த முயற்சிக்கு காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.