திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவுப்பொருட்கள் !!

ஒரு கப் சமைக்கப்பட்ட சோயாபீன்ஸில், கிட்டத்தட்ட 28 கிராம் புரோட்டின் நிறைந்துள்ளது. சோயாபீன்ஸ் பல்வேறு உணவுகளுக்கு மூலப்பொருளாக இருக்கிறது. இதனை நொறுக்குதீனியாக பயன்படுத்தலாம்.

திணையில் புரோட்டின், நார்ச்சத்துக்கள், அமினோ அமிலங்கள் ஆகியவை அதிகளவில் நிறைந்துள்ளன. குறிப்பாக தசைகளை வலுப்படுத்தும் அர்கினைன் உள்ளது. ஒரு கப் திணையில் 8 கிராம் புரோட்டின் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
பூசணி விதைகளில் பாஸ்பரஸ், ஜிங்க், மக்னீசியம், புரோட்டின்கள் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. 30 கிராம் பூசணி விதையில் நிறைந்துள்ள புரோட்டின்கள், முட்டையில் உள்ள புரோட்டின் அளவை விட அதிகம்.
 
பருப்பு புரோட்டின்களுக்கான மிகச்சிறந்த உணவாக உள்ளது. இதில் உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்களும், அத்தியாவசியமான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. ஒரு கப் பருப்பில் 14 முதல் 16 கிராம் புரோட்டின் உள்ளது.
 
தயிரில் புரோட்டின்களின் அளவு இருமடங்கு உள்ளது. இது வயிற்றை எளிதில் நிரப்புவதோடு ஆரோக்கியத்திற்கு அவசியமான புரோபயாடிக்குகள் சத்துகள் அதிகம் உள்ளது. ஒரு கப் கிரேக்க தயிரில் 17 கிராம் புரோட்டின் உள்ளது.
 
பன்னீரில் புரோட்டின் அதிகளவு உள்ளது. சுண்டலில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. வேக வைக்கப்பட்ட அரை கப் சுண்டலில் 7.3 கிராம் புரோட்டின் உள்ளது. 50 கிராம் பாதாம் வெண்ணெயில் 10 கிராம் புரோட்டின் உள்ளது. மேலும் பாதாம் வெண்ணெயில் கொழுப்புகள், வைட்டமின் ஈ, பயோட்டின் மற்றும் மங்கனீசு ஆகியவை உள்ளன.