ஞாயிறு, 16 பிப்ரவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

நீண்ட ஆயுள் கிடைக்க தன்வந்திரி வழிபாடும் பலன்களும் !!

திருமால் மக்களுக்காக மருத்துவராக தோன்றிய நாளே தன்வந்திரி ஜெயந்தியாகும் நோய் வராமல் நல்ல உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கிடைக்க தன்வந்திரி வழிபாடு செய்யப்படுகிறது.

ஸ்ரீ தன்வந்திரி, விஷ்ணு அம்சமாக பின்னிரு கரங்களில் சங்கு,சக்கரத்துடனும் முன் வலக்கையில் அட்டைப்பூச்சியை ஏந்தியும், இடக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி  அளிக்கிறார். அக்கால மருத்துவமுறையில் நோயாளியின் உடலிலிருந்து கெட்ட  ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப்பூ ச்சிகள் பயன்படுத்தப்பட்டனவாம்.
 
திருமாலின்  24 அவதாரங்களில் 17ஆவது அவதாரம் தன்வந்திரி அவதாரமாகும். இந்து மதத்தில் தன்வந்திரி உடல் நலத்திற்காக வழிபடக்கூடிய கடவுள் ஆவார். தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் கூறலாம்.
 
ஐப்பசி மாத அமாவாசை 2 நாட்களுக்கு முன்பாக வரும் திரியோதசி நாளன்று தீபாவளி திருநாள் துவங்கி விடுகிறது. அன்று தன்வந்திரி ஜெயந்தி தன்திரேயாஸ் என்றும் சொல்வர்.
 
தன்வந்திரி  மந்திரம்:
 
'ஓம் நமோ பகவதே மஹாசுதர்ஸன வாசுதேவாய தன்வந்த்ரயே
அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாய
த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூப
ஸ்ரீ தன்வந்த்ரி ஸ்வரூப ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஔஷத சக்ர நாராயணாய நமஸ்தே'.