1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (11:25 IST)

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு வலிமையை தரும் அத்திப்பழம்...!!

Figs
உலர்ந்த அத்திப்பழத்தில் ஆன்டி-ஆன்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. அதிலும் மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில் இதில் தான் நல்ல தரமான ஆன்டி-ஆன்ஸிடன்ட்டுகள் உள்ளது.


பொதுவாக காய்ந்த அத்திப்பழத்தை அப்படியே சாப்பிடலாம். இதில் அதிக கரையும் மற்றும் கரையா நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. நீரில் ஊற வைக்கும் போது கரையும் நார்ச்சத்து உடைந்து எளிதில் உடலுக்குள் செரிக்கப்படுவதால் ஊற வைத்த அத்திப்பழம் சாப்பிடுவது மலச்சிக்கலுக்கு நல்லது. இரவில் ஊற வைத்து அதிகாலையில் சாப்பிட்டால் நல்ல பலனை தரும்.

அத்தி பழத்தை தேனில் கலந்து சாப்பிடலாம் இப்படி சாப்பிட்டு வந்தால் பித்தம் நீங்கும் மற்றும் பித்தத்தால் வரும் நோய்களையும் குணமாக்குகிறது. மேலும் அத்திப்பழத்தில் தேன் கலந்து சாப்பிடுவதால் மூல நோய்கள் குணமாகும்.

அத்திப்பழம்  நல்ல மணத்துடன் இருக்கும். இந்த பழங்களை வெட்டி பார்த்தால் அதற்குள் மெல்லிய பூச்சிகள் மற்றும் புழுக்கள் தென்படும். அதனால் தான் பெரும்பாலும் அத்தி பழங்களை அப்படியே சாப்பிட படுவதில்லை. ஆகவே தான் இந்த பழங்களை உலர வைக்கப்பட்ட பின்னர் சாப்பிடப்படுகிறது.

உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான மூன்று விஷயம் என்னவென்றால், அத்திப்பழம் பேரிச்சம்பழம் தேன் இவை மூன்றையும் சொல்லலாம். இதனை நாள்தோறும் குறைவான அளவில் சாப்பிட்டு வந்தாலே போதுமானது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலும் வலிமை பெறும். உடலில் இரத்தம் அதிகரிக்கும். ஆண்களுக்கு ஆண்மை பெருகும்.