ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் தரும் சோம்பு...!

உடலின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முக்கிய காரணியாக இருக்கும் உறுப்பு ஈரல்தான், ஈரல் பாதிக்கப்பட்டால் பித்தம் அதிகமாகி பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். ஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.

எளிதில் ஜீரணமாகாத உணவுகள், அசைவ உணவுகள் போன்றவற்றில் சோம்பை அதிகம் சேர்த்து சமைப்பார்கள். இதன் பூ, விதை, வேர்  அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.
 
சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து காலை மாலை 1 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய்  குணமாகும்.
 
சாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள்  ஏற்படுகின்றன. இந்த புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும்.
 
பசியில்லாமல் அவதிப்படுபவர்கள் சோம்பை தனியாக மென்று சாப்பிட்டு வந்தால் நன்கு பசியெடுக்கும்.
 
கருப்பை பாதிக்கப்பட்டால் கருத்தரிப்பு நடக்காது. இதனால் சிலர் குழந்தை பேறு இல்லாமல் கூட அவஸ்தைப்படுவார்கள். பெருஞ்சீரகத்தை இளம் வறுவலாக வறுத்து பொடித்து, வேளையொன்றுக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது பனங்கற்கண்டு கலந்தோ சாப்பிட்டு வந்தால்  கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகும்.
 
நாள்பட்ட வறண்ட இருமல், இரைப்பு இவைகளால் அவதிப்படுபவர்கள் சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரைப் பருகி வந்தால் நாள்பட்ட இரைப்பு, மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.
 
சோம்பை நீரில் கொதிக்கவைத்து கொடுத்தால் குளிர் சுரம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.