1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

தினமும் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடிப்பதால்...?

அடிக்கடி நோயினால் பாதிப்புக்குள்ளானவர்கள் நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்த அடிக்கடி கற்றாழை ஜூஸை குடித்தால் பலனை பெறலாம். உயர் ரத்த  அழுத்தம் குறையும். சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைக்கும்.
கற்றாழை ஜூஸை குடித்து வந்தால் உங்கள் வெளிப்புற அழகிற்கு பலன் கிடைப்பதை விட இரு மடங்கு அழகை தரும். உள்ளிருந்து ஊட்டம் அளித்து  உங்களை இளமையாக்கும்.
 
ஹார்மோன் சமநிலையில் இருந்தால் மொத்த உடல் இயக்கத்திலும் பாதிப்பு உண்டாகும். இதற்கு இந்த ஜூஸ் நல்ல மருந்து. ஹார்மோன் சுரப்பை  சீர்படுத்துகிறது.
 
கற்றாழை ஜூஸை குடித்து வந்தால் ஜீரண மண்டலத்தில் உண்டாகும் பாதிப்புகள் குணமாகி ஜீரண உறுப்புகள் இளமையாகவே இருக்கும். கற்றாழை ஜூஸில் உள்ள சேர்மங்கள், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகள் மற்றும் டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றிவிடும்.
 
கற்றாழை ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
 
தினமும் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால், உடலினுள் உள்ள பாதிக்கப்பட்ட திசுக்கள் புதுப்பிக்கப்படும். இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலின் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.
 
உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வரஉடல் சூட்டினால்  முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால்தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள்மறைந்து போகும்.