திங்கள், 6 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

குதிக்கால் வெடிப்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வு..!

குதிக்கால் வெடிப்பு பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனையாக மாற வாய்ப்பு உள்ளது. அந்த பிரச்சனையால் அவதிப்படபவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலி. சில சமயம் சாதரணமாக வெளியே கால்களை நீட்டி உட்கார முடியாது. சில சமயங்களில் கடினமாக தளங்களில் அவர்களால் நடக்கவும் முடியாது. இதை சரி செய்ய  ஓர் எளிய இயற்கை மருத்துவம் உள்ளது.
அதற்கு முதலில் எலுமிச்சை பழத்தை எடுத்து இரண்டாக வெட்டி, அதிலிருக்கும் சாறை முற்றிலுமாக எடுத்து விடவேண்டும். நமக்கு தேவை அந்த எலுமிச்சை  தோல் மட்டும் தான். சற்றே காய்ந்த அந்த தோலை எடுத்து, அதை உங்கள் குதிக்காலில் படும்படி வைக்கவும். உங்கள் குதிக்கால் வெடிப்புகளை முழுவதும் கவர்  செய்யிம்படியாக வைக்கவேண்டும்.
 
பிறகு அந்த எலுமிச்சை தோலின் நிலை விலகாத வண்ணம், சாக்ஸை அணிந்துக் கொள்ளுங்கள். இது சருமத்தின் வறட்சி மற்றும் வெடிப்புகளை சரி செய்ய  உதவும். இதை இரவு நேரங்களில் பின்பற்றுவதால், எங்கும் நடக்காமல் ஓரிடத்தில் இருப்பதால் நல்ல பலன் அடையமுடியும். எலுமிச்சையின் நறுமணம் இரவு உங்கள் தூக்கமின்மை பிரச்சனையை போக்க உதவும். இதை தொடர்ந்து செய்து வருவதால், உங்கள் குதிக்கால் வெடிப்பு மெல்ல, மெல்ல குணமடைவதை நன்கு  உணர முடியும்.