வியாழன், 14 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By
Last Updated : செவ்வாய், 23 அக்டோபர் 2018 (11:59 IST)

மாதுளம்பழம் சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வராது

மாதுளம்பழம் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் சங்கத்தின்சேன்சர் பிரிவென்சன் ரிசர்ச்பத்திரிக்கையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. அண்மை காலமாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

ஆஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் காரணமாகவே 4-ல் 3 பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படலாம் என கணிக்கப்படுகிறது. இந்நிலையில் ஹார்மோன் காரணமாக ஏற்படும் புற்றுநோயிலிருந்து தப்பிக்க மாதுளம்பழம் சாப்பிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர். மாதுள்ம்பழத்தில் இயற்கையாகவே பைட்டோகெமிக்கல் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

எல்லஜிக் அமிலம் என்று அழைக்கபடும் இது, புற்றுநோய் செல்கள் வள்ர்வதை தடுக்கிறது. மாதுளம்பழத்தில் பைட்டோகெமிக்கல், அஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோனை கட்டுபடுத்துகிறது. இதனால் மார்பகப் புற்றுநோய்க்குக் காரணமான செல்கள் மற்றும் கட்டிகள் வளர்வது தடுக்கப்படுகிறது என கலிபோர்னியாவின் “டாரேட்டில் உள்ள சிட்டி ஆஃப் ஹோப்” மார்பக புற்றுநோய் ஆராய்ச்சி திட்டத்தின் இணை இயக்குனர் ஷியாவுன் சென் தெரிவித்துள்ளார்.

மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு மாதுளம்பழம் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது புற்றுநோயை கட்டுபடுத்துவதற்கான அமிலம் இருப்பது தெரியவந்துள்ளது. மாதுளையின் மருத்துவ குணங்கள் அதிகம் எனினும், இது ஆய்வக முடிவுதான். நிஜமா இது சாத்தியமா என்பதை உறுதியாக கூற இயலாது ஓஹியோ ஸ்டேட் யுனிவர்சிட்டியின் இண்டர்னல் மெடிசின் துறை பேராசிரியர் கேரி ஸ்டோனர் கூறினார்.