புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ள துரியன் பழம் !!

பலாப் பழத்தை போலவே வெளியே கரடு முரடான முள் தோற்றம் மற்றும் உள்ளே இனிப்பு சுவை கொண்ட பழம் எனவே துரியன் பழம் சுவைக்க தூண்டுகிறது.

துரியன் பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து, ரிபோப்ளேவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் என எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
 
மஞ்சள் காமாலை மற்றும் நகங்களில் ஏற்படும் நோய்த் தொற்றுக்கு நல்ல மருந்தாகிறது. துரியன் பழத்தில் மாங்கனீசு அதிகம் இருப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கிறது. 
 
ஒற்றைத் தலைவலிக்கு சிறந்த நிவாரணி. இது முகத்தில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்குவதால் இளமையான தோற்றத்தை கொடுக்கிறது. இப்பழத்தில் காணப்படும் பைரிடாக்சின் வைட்டமின் மன அழுத்தத்தை போக்குவதோடு தைராய்டு சுரப்பியை சீராக இயங்க வைக்கிறது.
 
இந்த பழங்களை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டுவந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் வலுவடையும். கொழுப்பு சத்தை கரைத்து, கலோரிகளாக மாற்றி, ரத்தத்தை சுத்தப்படுத்தி, இதயம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். 
 
எரிச்சல், கோபம், மன அழுத்தம், மன உளைச்சல் மற்றும் போதிய உடற்பயிற்சியின்மை ஆகியவற்றால் நரம்புகள் எளிதில் பலவீனமடைகின்றன. இந்த குறையை போக்க துரியன் பழம் பயன்படுகிறது.
 
துரியன் பழம்  மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. செரிமான சக்தியை தூண்டி, நன்கு பசியை ஏற்படுத்தும். விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வல்லது.