வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அன்றாடம் உணவில் முருங்கையை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்...!!

முருங்கை ஒரு சத்துள்ள உணவாகும். இதில் உடலுக்குத் தேவையான 90-க்கும் மேலான அனைத்து சத்துக்களும் உள்ளன. புரோட்டீன், இரும்பு, கால்சியம், வைட்டமின் B6, A & C, ரிபோஃப்ளாவின் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் கணிசமான அளவில் இதில் உள்ளன. 

முருங்கையை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமான அளவு குறைவது தெரியவந்துள்ளது.
 
அதீத சத்துக்கள் உள்ள முருங்கை உடலில் பல்வேறு விதமான நோயெதிர்ப்பு சக்திகளையும் அதிகரிக்கிறது. 
 
நோயெதிர்ப்பு கட்டமைப்பு சீராக வேலை செய்ய உதவும் வைட்டமின் A இரும்பு ஆகியவை இதிலிருப்பதால் இதன் நோயெதிர்ப்பு சக்தி அபாரமானது. 
 
அன்றாடம் உணவில் முருங்கையை ஏதாவது ரூபத்தில் சேர்த்துக் கொண்டால் கணிசமான அளவு உடல்நலம் அபிவிருத்தி அடைவதை உங்களால் உணரமுடியும்.
 
முருங்கை எண்ணெய் பயன்படுத்தினால் மிருதுவான பளபளப்பான தலைமுடியைப் பெறலாம். தினமும் நீங்கள் பயன்படுத்தி வரும் எண்ணெயுடன் சிலதுளிகள் முருங்கை எண்ணெயைக் கலந்து தலைஉச்சியில் தடவி வந்தால் தலை நுண்ணறைகள் ஆரோக்கியமடையும். தலைமுடியின் அடிப்பகுதியில் இதைத் தடவினால் முடி கொட்டுவதும் தடுக்கப்படும். 
 
காய்ந்த தலை உச்சி, தலைமுடி உள்ளவர்களுக்கு இது பலன் தரும். ஏனெனில் இது முடியின் மிருதுத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது. புரோட்டின் உட்பட பல  சத்துக்களை நுண்ணறைகளில் இது செலுத்துவதால் தலைமுடிக்குப் புத்துணர்வூட்டி முடியை வலுவாக ஆக்கி, முடிகொட்டுவதையும் தவிர்க்கும்.