ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தினமும் காலையில் சிறிதளவு இஞ்சி எடுத்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்...!!

இஞ்சியை தினமும் காலையில் சிறிது உட்கொண்டு வருவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளன.

நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடனும், சீராக வைக்கவும் உதவுகிறது. உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
 
இஞ்சியை காலையில் சாப்பிட்டால் உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். பசியுணர்வு அதிகரிக்கும். சிறிது இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து நெற்றியில் தடவினால், ஒற்றைத் தலைவலி நீங்கும்.
 
நீரில் சிறிது இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க, நெஞ்சுப் பகுதியில் தேங்கியுள்ள சளி முறிந்து, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
 
பல் வலி இருக்கும் போது, இஞ்சி துண்டை ஈறுகளில் மசாஜ் செய்தால், நிவாரணம் கிடைக்கும். இல்லாவிட்டால், நீரில் இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க  வைத்து, அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
 
இஞ்சி குமட்டல் மற்றும் வாந்தி வருவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி, காலையில் ஏற்படும் சோர்வையும் இஞ்சி தடுக்கும்.
 
இஞ்சியைத் தட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து பருக செரிமான பிரச்சனைகள் அகலும். அதிலும் காலையில் பருகினால், உங்கள் செரிமான மண்டலம் சுத்தமாகி, அதன் செயல்பாடு அதிகரிக்கும்.