வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சோம்புவில் தேநீர் செய்து குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள்!!

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சோம்பு டீயை குடிப்பது நல்லது மேலும் உங்கள் வாயை துர்நாற்றம் இல்லாமல் எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
சோம்பு கொண்டு தேநீர் தயாரித்து தினமும் குடித்து வருவது மிகவும் நல்லது. சோம்புவை டீ தயாரித்து குடல் மற்றும் உடலின் இதர பகுதிகளில் ஏற்படும் பிடிப்புக்கள் குறையும். உடலில் உள்ள அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமானால், முதலில் உடலில் உள்ள பிடிப்புக்களைக்  குறைக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. 
 
இந்த டீயை ஒருவர் தினமும் குடித்து வந்தால், சிறுநீரகங்களின் மூலை முடுக்குகளில் உள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, சிறுநீரக பிரச்சனைகள் வருவது குறையும். இது ஆர்த்ரிடிஸ் மற்றும் மூட்டு வலிகளால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.
 
அஜீரண கோளாறுகளை சரிசெய்யும். குறிப்பாக நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்பட்டு வந்தால், சோம்பு டீ குடிக்க விரைவில் குணமாகும்.
 
இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால் சோம்பு தேநீர் குடித்தால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். வயதானவர்களுக்கு ஏற்படும் ஆர்திரிடீஸ் மூட்டு வலியை சரிசெய்ய இது உதவுகிறது.
 
வயிற்று உப்பிசம் மற்றும் வாயுத்தொல்லை சரிசெய்ய இது உதவுகிறது. சிறுநீரகத்தில் ஏற்படும் நச்சு தன்மையை சரிசெய்ய இது உதவுகிறது. மேலும் சோம்பு நீரை குடித்தால் சிறுநீரக பிரச்சனைகள் வராது.
 
இரைப்பை மற்றும் வயிறு செரிமான பிரச்சனை போன்றவை ஏற்படாமல் இருக்க சோம்பு நீரை குடித்தால் போதுமானது. உடலின் பல்வேறு இடங்களில் ஏற்படும் பிடிப்புகள் மற்றும் அழுத்தத்தை குறைக்க வேண்டுமெனில் சோம்பு டீ குடித்தால் போதும்.