வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உணவுகளை எளிதில் செரிக்க உதவும் குடம் புளியின் பயன்கள்....!!

குடம் புளி, உடலின் சீரண சக்தியை அதிகரித்து, உணவை விரைவில் செரிக்க வைக்கும். உடல் எடையை குறைக்கும் மருந்துவகைகளின், மூல மருந்தாக பயன்படுகிறது.
இதில் உள்ள ஹைட்ராக்சி சிட்ரிக் அமிலம், இதயத்தை காக்கும் தன்மைமிக்கது. அதிகப்படியான பசி எண்ணத்தை குறைக்கும் மூளையின்  செயல்பாடுகளைத் தூண்டி, உடல் எடைக்குறைப்பில், முக்கிய பங்காற்றுகிறது. குடம் புளியை மூலப்பொருளாகக்கொண்ட, உடல் எடையைக்  குறைக்கும் மேலை மருந்துகளில், இதன் தாவரவியல் பெயரிலேயே, விற்பனையாகிறது.
 
மூளையின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் தன்மையுள்ள சித்த மருந்துகளில், குடம் புளி பெருமளவில் பயனாகிறது. குடம் புளி, உடல் தசைகளை உறுதியாக்கி உடல் பொலிவை அதிகரிக்கும் ஆற்றல்கொண்டது.
 
இரத்தக் கொழுப்புகளை கரைத்து, சர்க்கரை குறைபாடுகளை சரிசெய்து, வயிற்றுப்போக்கையும் கட்டுப்படுத்தும் உடல் நல மருந்தாகவும்  பயன்படுகிறது. குடம் புளி மரப்பட்டைப் பிசின், மருத்துவத்துறையில் பயன்படுகிறது.
மனிதர்களுக்கு மட்டுமன்றி, மாடுகளுக்கும் மருந்தாகிறது. இதன் பதப்படுத்தப்பட்ட பொடி, நகைகளை பாலிஷ் செய்ய பயனாகிறது. கேரளாவில் இரப்பர் மரப்பாலை, பதப்படுத்த பயன்படுகிறது.
 
குடம் புளியின் பழச்சதையை அப்படியே, சமையலில், சாம்பார் செய்ய, இரசம் செய்யப்பயன்படுத்தலாம், புளி சேர்க்கும் அனைத்துவகை உணவுகளிலும் பயன்படுத்தலாம்.
 
குடம் புளி பழச்சதை கிடைக்காதபட்சத்தில் இல்லையென்றால், நாட்டு மருந்துக்கடைகளில் பதப்படுத்தப்பட்ட குடம் புளியை வாங்கிப்  பயன்படுத்தலாம்.
 
நாம் அன்றாடம் பயன்படுத்தும், புளிக்கு மாற்றாக, இந்த குடம் புளியை பயன்படுத்தினால் உணவுகளில் ஒரு தனி மணமும் சுவையும் கூடவே, சாப்பிட்ட உணவுகள் எல்லாம் விரைவில் செரிமானம் ஆகச்செய்யும் தன்மைமிக்கது.