1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பூண்டு சாப்பிடுவது ரத்தத்தை சுத்திகரிக்க உதவுமா...?

தினமும் நம் உணவில் பூண்டு சேர்த்துக் கொள்வது எந்த வகையிலான இதயக் கோளாறுகளையும் தடுக்கிறது. உணவில் ஏதோ ஒரு வகையில் தினமும் பூண்டைச்  சேர்த்துக் கொள்ள வேண்டும். 

ரத்தத்தில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும் அல்லிஸின் போன்ற ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் பூண்டில் அதிகமாக இருக்கிறது.
 
ரத்தத்தில் அதிகமான நச்சுப் பொருள் இருப்பவர்கள் தினமும் பூண்டு சாப்பிடுவது ரத்தத்தைச் சுத்திகரிக்க உதவுகிறது. மேலும், முகத்தையும் பொலிவாக்குகிறது.
 
முடி உதிர்வதைத் தடுக்க, இளம் சூடான தேங்காய் எண்ணெயில் பூண்டை அரைத்துக் கலந்து அதைத் தலையில் மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து  குளித்துவிட வேண்டும்.
 
முகப்பரு வராமல் தடுக்கிறது. காரணம், பூண்டில் இருக்கும் அல்லிஸின் என்ற பொருள் பாக்டீரியாவை அழித்து முகப்பரு ஏற்படாமல் தடுக்கிறது. சோரியாஸிஸ் பிரச்சனை இருப்பவர்கள் பூண்டை நசுக்கி சுடுதண்ணீரில் கலந்து அதில் குளித்தால், அப்பிரச்சனை நீங்கும்.
 
பூண்டை சமைத்துச் சாப்பிடுவதைவிடப் பச்சையாகச் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. சாலட் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடுங்கள். காலை, இரவு என்று எப்போது  வேண்டுமானாலும் அளவுடன் பூண்டைச் சேர்த்துக்கொள்ளலாம்.