வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகள் எவை தெரியுமா...?

பாதாம் பருப்புகளில் பைபர், மெக்னீசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. தொடர்ந்து பாதம் எடுத்துக்கொள்வதால், விந்தணுக்களின் எண்ணிக்கை கணிசமாக  அதிகரிக்கும். 

மாதுளை ஜூஸை தினமும் எடுத்துக்கொண்டால், விந்து நீர்ப்பு இல்லாமல், விந்துவின் சக்தியும் அதிகரிக்கும் என்கிறது ஒரு ஆய்வுத் தகவல். இந்த மாதுளையில்  உள்ள ஆன்டி-ஆக்சிடென்ட் சத்துக்கள் இரத்த ஓட்டத்தை சீராக்கி அதிலுள்ள அணுக்களையும் தூண்டிவிடுகிறது. 
 
கீரைகளில் வைட்டமின் பி9 சத்துக்கள் எனப்படும் ஃபோலிக் ஆசிட் உள்ளது. இது ஆண்மையை இயற்கை முறையில் அதிகரிக்க வழிவகை செய்கிறது. 
 
முருங்கை கீரை, பூவை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் நாவின் சுவையின்மை பிரச்சனை தீரும். முருங்கை பூவை அரைத்து பால் மற்றும் பனங்கற்கண்டுடன் சேர்த்து அருந்தலாம். முருங்கை கீரையை அல்லது பூவை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும். 
 
ஆண்மை நீங்க மற்றும் விந்தணு அதிகரிக்க அத்திப்பழத்தை 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியாகும்.
 
புரோக்கோலி, வால்நட்ஸ், பூண்டு, தக்காளி, வாழைப்பழம், டார்க் சாக்லேட் மற்றும் சில உணவுகளும் ஆண்மையை இயற்கை முறையில் அதிகரிக்கும்.