திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : சனி, 18 ஜூன் 2022 (17:34 IST)

தினமும் உலர் திராட்சையை சாப்பிடுவதால் ரத்தசோகை சரியாகுமா...?

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு ரத்தசோகை ஏற்படும். இவர்கள் தினமும் உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை நோய் சரியாகும்.


உணவு செரிமானத்தை எளிதாக்க உலர் திராட்சை மிகவும் உதவுகிறது. நற்பகலில் அதிக அளவில் உணவை சாப்பிட்டால், பின்னர் சிறிது உலர் திராட்சையை சாப்பிடுவது மிகவும் நல்லது.

உலர் திராட்சையை தினமும் உட்கொண்டால் உடல் சூடு தனித்து, உடல் எடை அதிகரிக்கும். மேலும் பொட்டாசியம் அதிக அளவு உள்ளது. இந்த பொட்டாசியம் உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்த உதவுகிறது.

மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் இரண்டு முறை தொடர்ந்து உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை பெறலாம். ரத்தத்தை சுத்திகரிக்க உலர் திராட்சை மிகவும் உதவுகிறது.

மூல நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உலர்திராட்சையை தொடர்ந்து எடுத்து கொண்டால், அந்த நோயில் இருந்து விடுபடலாம். உலர் திராட்சையில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்க செய்கிறது.

நார்ச்சத்து நிறைந்த உலர் திராட்சையை சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். எலும்புகள், பற்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை காக்க உலர் திராட்சைப் பயன்படுகிறது.

தினமும் காலையில் சிறிது உலர்ந்த திராட்சையை சாப்பிட்டால் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.