தவசிக்கீரையின் மருத்துவ பயன்கள் !!
எந்த கீரைக்கும் இல்லாத சிறப்பு இக்கீரைக்கு உண்டு. இந்த கீரையில் விட்டமின்கள் ஏ, பி, பி-2, சி, டி, கே போன்றவை அடங்கியுள்ளது.
தவசிக்கீரையில் நார்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நீர்ச்சத்து, மாவுச்சத்து போன்ற சத்துப் பொருட்களும், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாது பொருட்களும், தயமின், ரிபோஃபிளேவின் நிகோடினிக் அமிலங்களும் அடங்கியுள்ளன.
உடல் வளர்ச்சிக்கு உறுதுணை புரிகிறது. சிறுவர்களின் எலும்பு வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. முதியோர்களின் எலும்பு தேய்வு,
சுண்ணாம்பு பற்றாக்குறையை சீர் செய்யும். கண் பார்வையை கூர்மையாக்கும். உடல் களைப்பு, அசதியை நீக்கும்.
இரும்புச்சத்து உள்ளதால் ரத்த சோகை குணமாகும். ஹீமோகுளோபின் அளவு கூடும். இலைகளை பிழிந்து சாறு எடுத்து அரைகரண்டி சாறுடன் இதே அளவு தேன் சேர்த்து அருந்த உடல் வளர்ச்சி பெறும்.
சரும பிரச்னை வராமல் தடுக்கும், பளபளப்பாக்கும். நரம்புத்தளர்ச்சியை நீக்கி நரம்புகளை வலுப்படுத்தும். அதிக அளவில் புரதச்சத்து உள்ளதால் உடலும், தசையும் உறுதி பெறும்.
விட்டமின் குறைபாடால் ஏற்படும் விளைவுகளை சரிசெய்யும். மூளை வளர்ச்சி, சுறுசுறுப்பிற்கு உதவுகிறது.