1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Vitamins and medicinal properties of guava fruit !!

கொய்யா பழத்தில் உள்ள வைட்டமின்களும் மருத்துவ குணங்களும் !!

கொய்யா பழம்
கொய்யா பழத்தில் இரண்டு வகைகள் உள்ளன. அவை, வெள்ளை, சிவப்பு கொய்யா போன்றவையாகும். இந்த இரண்டு பழங்களும் அதன் நிறத்தில் மட்டுமல்ல, மருத்துவ குணங்களிலும் பல வேறுபாடுகள் உள்ளன.

தினம் ஒரு கொய்யா பழத்தைச் சாப்பிட்டு வந்தால் வைட்டமின் சி குறைபாட்டைச் சரிசெய்ய முடியும். உடலின் சக்தி அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
 
கொய்யா ஜீரண உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. கொய்யா பழத்தை சாப்பிடுவதன் மூலம் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுவடையும்.
 
கொய்யாப்பழத்தில் மிகுதியாக இருக்கும் பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற தாதுக்கள் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க உதவுகின்றன. மேலும் உடலில் உள்ள நஞ்சுகளை அகற்றுவது, பைட்டோநியூட்ரியன்ஸ், ஃபிளவனாய்ட் போன்றவற்றின் மூலம் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
 
கொய்யா பழத்தில் அதிகளவு சோடியம் மற்றும் பொட்டாசியம் இருப்பதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது அருமருந்தாகும்.
 
பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பு மிகுந்த பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என சொல்வார்கள். ஆனால், கொய்யா பழத்தைச் சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம். டைப்-2 நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கும் கொய்யாப்பழம் உதவுகிறது.
அடுத்த கட்டுரையில்
மலச்சிக்கல் பிரச்சனையை முற்றிலும் நீக்கும் அதிமதுரப்பொடி !!