புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடலில் இன்சுலின் போதுமான அளவு சுரக்க உதவுமா இலவங்கப்பட்டை...?

பட்டை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் கீல்வாதம், மூட்டுவலி, தசைவலியை சரி செய்யும். அதுமட்டுமல்ல மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்.

டைப் 2 சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க இலவங்கப் பட்டை உதவுகிறது. மேலும் உடலில் உள்ள இன்சுலின் போதுமான அளவு சுரக்க உதவுகிறது.
 
இலவங்கப்பட்டையில் உள்ள பாலிஃபீனால்களின் ஆக்சிஜனேற்ற எதிர்ப்புப் பண்பில் இது பூண்டை விட அதிக செயல்திறன் கொண்டதாகத் திகழ்கிறது.
 
உடல் எடை குறைவதற்கு இலவங்கப்பட்டை உதவுகிறது. இலவங்கப்பட்டையில் சிறிதளவு நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்திற்கும் உடலில் உள்ள நச்சுப்பொருள்களை வெளியேற்றவும் உதவுகிறது.
 
இலவங்க பட்டை நுரையீரலில் இருந்து சளியை அகற்றுவதால், பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு நுரையீரலில் ஏற்பட்ட இறுக்கம் மற்றும் அடைப்பை சரிசெய்ய உதவுகிறது.
 
இலவங்கப்பட்டையில் ஆன்டிஆக்சிடன்ட் பண்புகள் உள்ளன. அவை அல்சீமர் நோய், பர்கின்சன் நோய் போன்ற நரம்பியல் நோய்கள் வருவதைத் தடுக்க உதவுகிறது. நரம்புகளைப் பாதுகாக்கும் புரதங்களைத் தூண்டி மூளை செல்கள் சேதமடைவதைத் தடுக்கிறது.
 
வாயில் இருக்கும் பாக்டீரியாக்களால் பற்சிதைவு, பற்சொத்தை போன்ற பிரச்சனைகள் தோன்றுகின்றன. இலவங்கப்பட்டை வாயில் உள்ள பாக்டீரியாக்களை அகற்றுகிறது, இதனால்தான் பற்பொடி மற்றும் பற்பசைகளில் இலவங்கப்பட்டை பயன்படுத்தபடுகிறது.