1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Do you know why it is good to drink sugarcane juice...?

கரும்பு சாறு குடிப்பது நல்லது ஏன் தெரியுமா...?

கரும்பு சாறு
உடலில் ஏற்படும் வறட்சியை நீக்க கரும்பு சாற்றை குடிக்கலாம். மேலும் கோடைகாலத்தில் உடலானது அதிக சூடாக இருக்கும். எனவே உடல் வெப்பத்தை  தணிப்பதற்கு தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு குடிப்பது நல்லது.
 
 
கரும்பில் இயற்கையாக உள்ள அல்கலைன் என்னும் பொருள், புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையுடையது. குறிப்பாக பெருங்குடல், நுரையீரல் அல்லது மார்பக  புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறந்தது.
 
கரும்பில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அதிலும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால், உடலில் எந்த ஒரு ஊட்டச்சத்து குறைபாடுமின்றி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
 
உடல் எடையை குறைக்க விரும்புவோர் அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதனை எந்த ஒரு அச்சமுமின்றி சாப்பிடலாம்.
 
உடலில் உள்ள சிறுநீரக குழாய், பிறப்புறுப்பு, செரிமான மண்டலக் குழாய் போன்ற பல இடங்களில் தொற்றுநோய்களினால் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படும்.  இத்தகையவற்றை சரிசெய்ய ஒரு டம்ளர் கரும்பு சாறு குடித்தால், அவை சரியாகிவிடும்.
 
மஞ்சள் காமாலையிலிருந்து உடனே குணமாவதற்கு, இரண்டு டம்ளர் கரும்பு சாற்றுடன் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.
 
நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. சாற்றில் கால்சியம், தாமிரம், மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற முக்கிய தாதுக்களும் உள்ளன.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
எளிதில் கிடைக்கும் கரிசலாங்கண்ணி கீரையில் இத்தனை சத்துக்கள் உள்ளதா...?