வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

முடி உதிர்வை தடுத்து நன்கு வளர உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

கற்றாழை ஜெல் முடியின் வளர்ச்சியை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, ஸ்கால்ப்பை ஆற்றவும், கண்டிஷனராகவும் செயல்படும். அதோடு இது பொடுகு மற்றும் அதிகப்படியான எண்ணெயால் மயிர்கால்களில் ஏற்படும் அடைப்பைக் குறைக்க உதவும்.

அதற்கு கற்றாழை ஜெல்லை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி ஊறவைத்து குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு சில முறை செய்து வந்தால், தலைமுடியின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் ஒரு நல்ல மாற்றம் தெரியும்.
 
தேங்காய் எண்ணெயில் ஃபேட்டி அமிலங்கள் உள்ளன. இது முடியினுள் ஊடுருவி முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் முடியில் இருந்து புரோட்டீன் இழப்பதைக் குறைக்கும்.
 
தேங்காய் எண்ணெயை ஸ்கால்ப் மற்றும் ஒட்டுமொத்த முடியிலும் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து ஊற வைத்து, பின் தலைமுடியை அலச வேண்டும். இப்படி அடிக்கடி செய்தால், தலைமுடி நன்கு வளர்ச்சி பெறும்.
 
நற்பதமான எலுமிச்சை சாறு மற்றும் எலுமிச்சை எண்ணெய்யை ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவுவதன் மூலம், தலைமுடி மற்றும் ஸ்கால்ப் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் முடியின் வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படும்.
 
அதற்கு எலுமிச்சை சாற்றில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி நன்கு மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊறவைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.