திங்கள், 4 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வசம்பு எதற்கு பயன்படுகிறது தெரியுமா....?

வசம்பு ஜலதோஷ தொல்லைக்கு சிறந்த நிவாரணமாக இருக்கிறது. கால் ஸ்பூன் அளவு வசம்பை வெந்நீரில் கலந்து பருகி வந்தால் ஜலதோஷம் மற்றும் தொண்டைகட்டு போன்றவை சீக்கிரத்தில் குணமாகும்.

நசுக்கிய வசம்பு, சிறிதளவு வேப்பிலைகள் ஆகியவற்றை தேங்காய் எண்ணையில் கொதிக்க வைத்து, ஆற வைத்து அந்த எண்ணையை தலைக்கு தடவி வந்தால்  பொடுகு தொல்லை சீக்கிரம் குணமாகும்.
 
சுடு தண்ணீர், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.
 
வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
 
சிறு குழந்தைகள் உறங்குகின்ற அறைகளில் வசம்பு பொடியை ஆங்காங்கே தூவி வைப்பதால் தொற்று கிருமிகள், நுண்ணுயிரிகள் போன்றவற்றால் குழந்தைகளுக்கு  நோய் தொற்றும் அபாயத்தை வெகுவாக குறைக்கிறது.
 
வசம்பை நன்கு பொடி செய்து தேன் விட்டு குழைத்து திக்குவாய் பாதிப்பு கொண்டவர்களின் நாவில் தடவி வந்தால் திக்குவாய் குணமாக உதவும்.