கிவி பழத்தில் என்னவெல்லாம் சத்துக்கள் நிறைந்துள்ளது தெரியுமா...?
கிவி பழம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களைத் தடுக்கவும் உதவும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் கிவி பழத்தை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. கருவின் வளர்ச்சிக்கு ஃபோலிக் அமிலம் மிகவும் முக்கியமான சத்தாகும்.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் சாப்பிட வேண்டிய பழங்களில் ஒன்று கிவி பழம். கிவி பழத்தில் அதிக நீர் உள்ளடக்கம் உள்ளது, கலோரிகள் குறைவாக உள்ளன மற்றும் நல்ல அளவு நார்ச்சத்து உள்ளது.
கிவி பழம் இரத்தத்தை உடல் முழுவதும் சிறப்பாக ஓடச் செய்யும். மேலும் கிவி பழத்தை சாப்பிட்டால், உடல் இரும்புச்சத்தை உறிஞ்சும் திறன் அதிகரித்து, இரத்த சோகை வரும் அபாயத்தை தடுக்கிறது.
கிவி பழம் ஆஸ்துமாவை சரிசெய்யும் ஆற்றல் கொண்டது. கிவி பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன.
கிவிப் பழத்தில் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. கிவிப் பழம் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவி செய்கிறது.