வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 4 ஜூன் 2022 (17:03 IST)

உலர் அத்திப்பழத்தில் உள்ள சத்துக்களும் அதன் பலன்களும் !!

தினமும் ஒரு அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் அதிலிருந்து 3% கால்சியம் நமக்கு கிடைக்கிறது. இதனால் எலும்புத் தேய்மானம், மூட்டு வலி வராமல் தடுக்கலாம்.


ஒரு உலர் அத்தி பழத்தில் 46 கலோரிகள் இருக்கிறது. இதனால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாக பயன்படும்.

உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், செரிமான பிரச்சனைகள் ஆகியவை நீங்கும். இதில் வைட்டமின் சி மற்றும் ஈ அதிகம் உள்ளது. உலர்ந்த அத்திப்பழத்தில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது.

அத்திப்பழம் எளிதில் ஜீரணமாகும். மேலும் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். மற்ற பழங்களில் உள்ள சத்துக்களை விட அத்திப்பழத்தில் நான்கு மடங்கு கிடைக்கிறது.

உலர்ந்த அத்திப்பழத்தில் ஆன்ட்டி ஆக்சிடெண்ட் அதிகமுள்ளது. இது ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் இதயத்தைப் பாதுகாக்கிறது. மேலும் இதயத்தின் ரத்த ஓட்டம் சீராக பாய்கிறது.

நமது உடலில் சோடியத்தின் அளவு அதிகமாகி பொட்டாசியத்தின் அளவு குறைந்தால் ரத்த அழுத்தம் ஏற்படும். இதனை தடுக்க உலர்ந்த அத்திப்பழம் உதவுகிறது. இதில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளதால் இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.