1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

பழங்களில் உடல் எடையை குறைக்க உதவுபவை எவை தெரியுமா...?

அவகோடா: அவகோடா பழத்தில் நல்ல கொழுப்பு அதிகமிருக்கிறது. அதோடு இதில் அதிகளவு தண்ணீர் சத்தும் ஒலிக் அமிலமும் கலந்திருக்கிறது இதனை எடுத்துக் கொள்வதால் நம் உடலில் டெஸ்ட்ரோன் என்ற ஹார்மோன் சுரக்க உதவிடும். இந்த ஹார்மோன்  கொழுப்பை கரைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.
தர்பூசணி: தர்பூசணியில் தண்ணீர் சத்து மட்டுமே நிறைந்திருக்கிறது. அதோடு ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களை அதிகரிப்பதோடு தசைகளை வலிமையாக்குகிறது. இதில் இயற்கையாகவே கொழுப்பை கரைக்கும் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
பேரிக்காய்: பேரிக்காய் எடுத்துக் கொண்டால் செரிமானத்தை சீராக்கும். அதோடு மலச்சிக்கல் மற்றும் பசியின்மைக்கு தீர்வாக அமைந்திடுகிறது. சரியாக உணவு சாப்பிட முடியவில்லை என்று ஸ்நாக்ஸ் எடுத்துக் கொள்வது குறையும்.
 
ஸ்ட்ராபெர்ரி: ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இருக்கும் லெப்டின் மற்றும் அடிபோநிக்டின் என்பது  ஹார்மோனை அதிகரிக்கிறது. இவை அதிகமாக சுரப்பதால் நம் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துவதோடு கொழுப்பினை கரைக்க உதவுகிறது. அதோடு ஸ்ட்ராபெர்ரியில் உள்ள ஆண்ட்டி இன்ஃப்லமேட்டரி என்சைம் உடல் எடையைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.
 
எலுமிச்சை: எலுமிச்சை பழம் நம் வீடுகளில் அன்றாடம்பயன்படுத்துவோம். எலுமிச்சையில் இருக்கும் விட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம்  கொழுப்பை கரைக்க உதவுகிறது. அதோடு உணவு செரிக்கவும் உதவுகிறது.
 
மாதுளம் பழம்: மாதுளம் பழத்தில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது. இவை உடலில் உள்ள நச்சுக்களை  வெளியேற்றிடும். அதோடு உடலில் உள்ள கெட்ட கொழுப்பினையும் நீக்க உதவுகிறது.
 
ஆரஞ்சு: ஆரஞ்சுப் பழத்தில் விட்டமின் சி அதிகம் உள்ளது. இவை நம் உடலில் கொலாஜன் உற்பத்திக்கு உதவிடும். அதோடு இதிலிருக்கும்  புரதச்சத்து நமக்கு தேவையான எனர்ஜியை கொடுக்கிறது. இதனால் கூடுதலாக உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு  தோன்றாது. அதே போல இதில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்து உள்ளதால் அவை உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
 
திராட்சை: திராட்சையில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் இருக்கிறது. அதோடு சர்க்கரையும் இருப்பதால் இவை எனர்ஜியை தரக்கூடும். காலை உணவுடன் ஒரு கப் கிரேப்ஸ் எடுத்துக் கொள்ளலாம். இவை மற்ற உணவுகளையும் எளிதாக செரிக்கச் செய்திடும்.
 
அன்னாசிப்பழம்: உடல் எடையைக் குறைக்க அன்னாசிப் பழத்தையும் நீங்கள் தாரளமாக சாப்பிடலாம். அன்னாசிப் பழத்தில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட், மினரல்ஸ், விட்டமின்கள் உள்ளது. ‘ப்ரோமிலைன்’ உடல் எடையைக் குறைக்கும் சக்தி கொண்டது. ஜீரண சக்தியை நன்கு தூண்டக்கூடியது. அன்னாசிப்பழம் உடல் சூட்டினை அதிகரிக்கக்கூடியது. அதனால் இதனை அளவாகச் சாப்பிட வேண்டும்.