முடி வளர்ச்சிக்கு தேவையான உணவு வகைகள் என்ன...?

Sasikala|
கறுப்பு எள் விதைகள் தாமிரம் மற்றும் துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கின்றன. ஆரோக்கியமான முடி வளர்ச்சி உள்ளிட்ட உடலின் சரியான செயல்பாடுகளுக்கு காப்பர் அவசியம். அது, எள்விதைகளில்தான் இருக்கிறது.
கீரையில் அதிகளவு இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, புரதம் உள்ளன. முடி உதிர்வுக்கு ஒரு முக்கியக் காரணமான இரும்புச்சத்து  குறைபாட்டுக்கு தீர்வாக இது இருக்கிறது. மேலும், தலையில் உள்ள எண்ணெய்ச் சுரப்பியைத் தூண்டி, முடிக்கு இயற்கையான கண்டிஷனராகச்  செயல்படுகிறது. 
 
உணவில் புரதச்சத்து மிகுந்த பால், முட்டை, மாமிசம் முளைக்கட்டிய தானியங்கள் பருப்பு வகைகள் போன்றவை முடியின் ஆரோக்கியத்துக்கு  முக முக்கியமானவை.
 
ஸ்டாபெர்ரியில் வைட்டமின் சி உள்ளது. இது கொலாஜன் உற்பத்திக்காக உதவுகிறது. இது கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் போன்ற சேர்மங்கள் பெர்ரியில் உள்ளன. 
 
முடிக்கு பளபளப்பை கொடுப்பது கொழுப்புச்சத்து, மீன், மாமிசம், பால், தாவர எண்ணெய்களில் அதிகமாக இருக்கிறது. ஓட்ஸில் வைட்டமின்  பி-யும் தாதுஉப்புக்களும் நிறைவாக உள்ளன. மெலனின் என்ற நிறமி, முடிக்கு நிறமளிக்கக் கூடியது. 
 
முட்டையில் புரோட்டீன், வைட்டமின் பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. 
 
முடி வளர்ச்சிக்கு இரும்புச்சத்து மிக அவசியமானது. இரும்புச்சத்தானது பனைவெல்லம், எள், கேழ்வரகு, பேரீட்சை, கீரை வகைகள் போன்ற உணவு வகைகளில் அதிகம் காணப்படுகிறது.
 
இளநரைக்கு நிறமிச் சத்துக்கள் அதிகம் கொண்ட கேரட், பீட்ரூட், கறிவேப்பிலை, செங்கீரை போன்றவைகளை உணவில் அதிகம் சேர்த்துக்  கொள்ளலாம்.


இதில் மேலும் படிக்கவும் :