புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

சோயா பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா...?

சோயா பீன்ஸில் அதிக அளவில் புரோட்டீன், மிதமான அளவில் கொழுப்பு, நார்ச்சத்து, பி வைட்டமின்கள், ஃபோலிக் அமிலம், பொட்டாஷியம்,  கால்சியம் மற்றும் இரும்புச் சத்துகள் நிறைந்துள்ளன.
சோயாவில் கரையும் நார்ச்சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. சோயா உணவு கெட்ட கொலஸ்ட்ரால்  என்னும் LDL அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவைக் கூட்டுவதன் மூலம், மாரடைப்பைக் குறைக்கிறது.
 
தினசரி சோயா உட்கொள்வதன் மூலம் பல்வேறு வகையான புற்று நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். முக்கியமாக நாள்பட்ட பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்துவதில் சோயா பெரும் பங்காற்றுகிறது.
 
சோயா உணவு மாதவிடாய் நின்ற பின் உடலில் ஏற்படும் சங்கடங் களைக் குறைத்து, எலும்புகளின் சீரழிவைத் தடுக்கிறது. சோயா உடல்  முதிர்ச்சியைத் தாமதப்படுத்துகிறது.
 
இரும்புச்சத்தும், கால்சியமும் நிறைந்துள்ளதால், இவ்வுணவு கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஏற்றது. சோயாவில் அடங்கியுள்ள பீட்டா கரோட்டின் எனப்படும் விட்டமின் ‘ஏ’ சத்து சருமத்தை மென்மையாக்குவதுடன், கண் சம்பந்தமான  முக்கியமான மாலைக் கண் நோயைத் தடுக்கிறது.
குழந்தைகளுக்குத் தினமும் சோயா உணவில் சேர்க்கப்படும் போது மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சிறந்த முன்னேற்றத்தைக் காணலாம். குழந்தைகளுக்கு மாற்று உணவாக சோயா தொடர்ந்து தரப்பட்டு வந்தால் உடல் எடை, உயரம் மற்றும் நினைவாற்றல் கூடுவதுடன்  ஹீமோகுளோபின் எண்ணிக்கையும் உயரும்.
 
சோயா உணவு கால்ஷியம், மக்னீஷியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களைக் கொண்டிருப்பதால், பற்களை உறுதிப்படுத்துவதுடன் நரம்பு  சம்பந்தமான நோய்களையும் தடுக்கிறது.
 
சோயா உணவு யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தி மூட்டுவலியைக் குறைத்து சிறுநீரகக் கோளாறிலிருந்து பாதுகாக்கிறது. அனைத்துப் பருப்புகளிலும் உள்ள புரதச் சத்தைவிட மும்மடங்கு புரதச்சத்து சோயா வடகத்திலுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கும் இது மிக அவசியமான  ஊட்டச்சத்து உணவு.