திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 20 மே 2022 (13:19 IST)

சுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா...?

உடல் செரிமானத்திற்கு மிக சிறந்தது தேன். உடல் பருமனை குறைக்க தேன் முக்கிய பங்கு வகிக்கிறது.


தேன் தினமும் உண்பதால் என்றும் இளமை பொலிவுடன் இருக்கலாம். உடலில் ஏற்படும் காயங்களுக்கு சிறந்த மருந்தாக தேன் இருக்கிறது.

ஒரு சிறிய கிண்ணத்தில் நீரை ஊற்றி அதில் கொஞ்சம் தேனை விடவேண்டும். நீரில் அந்த தேன் கரைந்தால் அது இயற்கையான தேன் இல்லை. தேன் பாத்திரத்தின் அடியில் தங்கினால் அது சுத்தமான தேன் ஆகும்.

சுத்தமான தேன் நன்கு சுடர் விட்டு எரியும். அதாவது ஒரு காட்டன் துணியை எடுத்து அதில் ஒரு சொட்டு தேன் ஊற்றி எரிய விட வேண்டும். சுத்தமான இயற்கை தேனில் எறும்புகள் மொய்க்காது. கலப்படம் செய்யப்பட்ட தேனில் அடர்த்தி தன்மை குறைவாக இருக்கும்.

ஒரு கண்ணாடி ஜாரில் தேனை ஊற்றி அதன் நிறம் நாளைடைவில் மாறாமல் இருக்க வேண்டும். சுத்தமான தேனில் நிறம் என்றும் மாறாது , கெட்டுப் போகாது.

உடல் எடை குறைய: வெது வெதுப்பான நீரில் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் உடல் எடை கண்டிப்பாக குறைய தொடங்கும். ஓமம் சிறிதளவு எடுத்து அதை இளம் சூட்டில் வறுத்து பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.